பிரதான செய்திகள்

இஸ்மாயில்புரம் வீட்டுத் திட்டத்தில் உள்ள தைக்கா பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்.

முந்தல் பெருக்குவற்றான் இஸ்மாயில்புரம் வீட்டுத் திட்டத்தில் உள்ள தைக்கா பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று இரவு 7.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், குறித்த பள்ளிவாசலுக்கோ அல்லது நபர்களுக்கோ எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அந்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் வீதியை நோக்கி பொருத்தப்பட்டிருக்கும் CCTV கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் ௯றினர்.

இந்த சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸீன் ரஸ்மின்

Related posts

அப்துல் கலாமின் பிறந்த நாளுக்கு இந்தியா தூதரகம் அழைப்பு

wpengine

Northern Politicos Not Happy

wpengine

ஆனையிறவு உப்பளம் ‘ரஜ லுணு’ என்ற பெயரில் கையளிப்பு..!

Maash