இஷாக் ரஹ்மான் (எம்.பி) இலங்கைக்கான குவைத் உயர் ஸ்தானிகர் சந்திப்பு

(நாச்சியாதீவு பர்வீன்)
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்ஹாக் ரஹுமான்  அவர்கள் நேற்று குவைட் உயர் ஸ்தானிகர் கலாஹ் அபூஜாஹிர் அவர்களை  அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்பில் அனுராதபுர மாவட்ட முஸ்லிம்களின்குறைகளை பற்றி இருவரும் கலந்தாலோசித்தனர்.

அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் கல்விப்பிரச்சினை,அபிவிருத்திப்பிரச்சினை,தொழில்வாய்ப்பு,சுயதொழில் வாய்ப்புக்கள் பற்றி விரிவாக இந்த சந்திப்பில் பேசப்பட்டது.

இந்த சந்திப்பு பற்றி பாராளமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் கருத்துத்தெரிவிக்கையில் அனுராதபுர மக்களின் வாழ்வாதாரப்பிரச்சினைகளை உயர் ஸ்தானிகருக்கு தெளிவு படுத்தியுள்ளேன். அவர் எனது மக்களின் பிரச்சினைகளை தீர்த்துத்தருவதாக வாக்களித்துள்ளார்.

அதன் முதற்கட்டமாக வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள வீடற்ற ஏழைகள் ஐம்பது பேருக்கு,எமது மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட 50 வீடுகளை உள்ளடக்கியதான கிராமம் ஒன்றை  அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளதாகவும்,இதற்கு பொருத்தமான இடத்தை தெரிவு செய்யுமாறு தான் பணிக்கப்பட்டிருப்பதாகவும் அனுராதபுரமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்ஹாக் ரஹுமான் அவர்களிடம் கூறினார்∙

மேலும் அனுராதபுர மாவட்டத்தில்  சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் ஒரு  நல்லதிட்டத்தை பரிந்துரை செய்யுமாறும் அத்தோடு சகல கிராமங்களுக்கும் நீர்
சுற்றிகரிப்பு  இயந்திரங்களை பெற்றுத் தர எதிர்காலத்தில் முயற்சி செய்வதாகவும் குவைத் உயர் ஸ்தானிகர் வாக்களித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்ஹாக் ரஹுமான் அவர்களிடம் கூறினார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares