பிரதான செய்திகள்

இளம் யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி விநாயகர் கிராமத்தில் இளம் யுவதியொருவர்தூக்கிட்டு உயிரிழந்த சம்பவமொன்று புதன்கிழமை பதிவாகியுள்ளது.

சித்தாண்டி விநாயகர் கிராமத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி நிறோஜினி (வயது 22) என்ற இளம் யுவதியேபுதன்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் சகோதரிதெரிவித்துள்ளார்.

உயிரிழந்த யுவதியின் தாய் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் நோய் வாய்ப்பட்டு மரணமடைந்த நிலையில்தாயின் ஏழாவது ஆண்டு தின நினைவஞ்சலியும் புதன்கிழமை என்பதால் குடும்பத்தில் பெரும்சேகத்தைஏற்படுத்தியுள்ளது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.unnamed (8)

தாயின் ஏழாவது ஆண்டு நினைவு தின பூசைக்காக செவ்வாய்கிழமை பூசைப் பொருட்களையும் கொள்வனவுசெய்து வைத்திருந்த நிலையில் இவ்வாறான சோக சம்பவம் பதிவாகியுள்ளது என தெரிவித்தனர்.unnamed (10)

குறித்த சம்பவம் தொடர்பாக கிராமசேவகர் மற்றும் ஏறாவூர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்துமேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.unnamed (7)

 

Related posts

தேர்தல்லை நடாத்த ஆணைக்குழு தயார்! ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்பாளர்களுக்கு

wpengine

நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர்களை சந்தித்த இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்!

Editor

தேசிய மக்கள் சக்தி கட்சிக்குள் தற்கொலைப் போராளிகள் ஊடுருவல்! ஞானசார தேரர் தெரிவிப்பு .

Maash