பிரதான செய்திகள்

இளம் கண்டு பிடிப்பாளர் யூனூஸ்கானுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த ஷிப்லி பாறுக்

(எம்.ரீ. ஹைதர் அலி)
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்கும் இளம் கண்டு பிடிப்பாளரான எம்.எம். யூனூஸ் கான் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் 2017.07.31 – திங்கட்கிழமை (இன்று) அவரின் இல்லத்திற்கு நேரில்சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அத்துடன் அவரது ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புக்களும் மென்மேலும் தொடர வேண்டுமெனவும் வாழ்த்தினார்.


கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் எம்.எம். யூனூஸ் கான் நெல் விதைக்கும், உரம், எண்ணெய் விசுறும் செயற்பாடுகளைக் கொண்ட இயந்திரமொன்றினை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார்.

 

 
குறித்த இயந்திரம் மூலம் மேற்கூறிய செயற்பாடுகளைத் திறம்பட மேற்கொள்வதோடு, தானியக்க கருவியூடாக வயல் வரப்புகளிலிருந்து கொண்டே சிரமமின்றியும் இயக்கும் திறனைக்கொண்டமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் எம்.எம். யூனூஸ் கான் 8ஆம் மாதம் தென் கொரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கண்காட்சியில் தனது கண்டுபிடிப்பினை காட்சிப்படுத்தும் வாய்ப்பினைப் பெற்று 2017.08.08ஆந்திகதி  – செவ்வாய்க்கிழமை தென் கொரியா நாட்டுக்கு பயணமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இச்சந்திப்பின்போது கல்குடாத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம். திபாஸ் அவர்களும் கலந்துகொண்டார்.

Related posts

ராஜபஷ்ச அரசில் பொருளாதார சபையின் உறுப்பினராக ரணிலை நியமிக்க நடவடிக்கை

wpengine

ஊடகவியலாளர்கள் எவரும் இங்கு வரவில்லை ரணில் கவலை

wpengine

பொதுபல சேனாவுடனான தனது சகோதரிக்கு உள்ள உறவு தொடர்பில் அஸாத் சாலி விளக்கம் அளிக்க வேண்டும்.

wpengine