பிரதான செய்திகள்

இல்லங்கள் சேதமடைந்தததாக அரசாங்கத்திடம் கோடிகளை பெற்றுக் கொண்ட 43 உறுப்பினர்கள்.

2022ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது தமது இல்லங்கள் சேதமடைந்தததாக அப்போதைய அரசாங்கத்திடம் இழப்பீடு பெற்றுக் கொண்ட 43 உறுப்பினர்களுடைய பெயர்ப்பட்டியல் மற்றும் அவர்கள் பெற்றுக் கொண்ட பணத்தொகை விபரங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியின் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விபரத்தை சபையில் வெளியிட்டுள்ளார்.

மொத்தமாக 122 கோடியே 41 ,லட்சத்து 34 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக பெற்றுள்ளனர்.

இந்தவகையில்,

  1. கெஹலிய ரம்புக்வெல்ல – ரூ. 95.9 மில்லியன்
  2. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – ரூ. 93.4 மில்லியன்
  3. அலி சப்ரி ரஹீம் – ரூ. 70.9 மில்லியன்
  4. காமினி லொகுகே – ரூ. 74.9 மில்லியன்
  5. நிமல் லான்சா – ரூ. 69.2 மில்லியன்
  6. கோகில குணவர்தன – ரூ. 58.7 மில்லியன்
  7. பிரசன்ன ரணதுங்க – ரூ. 56.1 மில்லியன்
  8. சமல் ராஜபக்ச – ரூ. 6.539374 மில்லியன்
  9. சுமித் உடுகும்புருவ – ரூ. 55.9 மில்லியன்
  10. அருந்திக பெர்னாண்டோ – ரூ. 55.2 மில்லியன்
  11. சனத் நிஷாந்த – ரூ. 42.7 மில்லியன்
  12. எஸ்.எம். சந்திரசேன – ரூ. 43.8 மில்லியன்
  13. சாந்த பண்டார – ரூ. 39.1 மில்லியன்
  14. சந்திம வீரக்கொடி – ரூ. 6.9488 மில்லியன்
  15. அசோக பிரியந்த – ரூ. 7.295 மில்லியன்
  16. சமன்பிரியா ஹேரத் – ரூ. 10.502 மில்லியன்
  17. ஜனக பண்டார தென்னகோன் – ரூ. 10.55 மில்லியன்
  18. ரோஹித அபேகுணவர்தன – ரூ. 11.64 மில்லியன்
  19. சீதா ஆரம்பேபொல – ரூ. 13.78 மில்லியன்
  20. சஹன் பிரதீப் – ரூ. 17.13 மில்லியன்
  21. ஷெஹான் சேமசிங்க – ரூ. 18.51 மில்லியன்
  22. இந்திக அனுருத்த – ரூ. 19.55 மில்லியன்
  23. மிலன் ஜயதிலக – ரூ. 22.3 மில்லியன்
  24. ரமேஷ் பத்திரன – ரூ. 28.1 மில்லியன்
  25. துமிந்த திசாநாயக்க – ரூ. 28.8 மில்லியன்
  26. கனக ஹேரத் – ரூ. 29.2 மில்லியன்
  27. டி.பி. ஹேரத் – ரூ. 32.1 மில்லியன்
  28. பிரசன்ன ரணவீர – ரூ. 32.7 மில்லியன்
  29. டபிள்யூ.டி. வீரசிங்க – ரூ. 37.2 மில்லியன்
  30. சமோத் அத்துகோரளே – ரூ. 2.54061 மில்லியன்
  31. அகில எல்லாவல – ரூ. 3.55425 மில்லியன்
  32. சன்ன ஜெயசுமன – ரூ. 3.334 மில்லியன்
  33. சிறிபால கம்ப்ளாத் – ரூ. 50.9 மில்லியன்
  34. விமல் வீரவன்ச – ரூ. 2.954 மில்லியன்
  35. ஜெயந்த கெட்டகொட – ரூ. 2.8148 மில்லியன்
  36. பிரியங்கரா ஜெயரத்னா – ரூ. 2.348 மில்லியன்
  37. பிரேம்நாத் சி. டோலவத்த – ரூ. 2.3 மில்லியன்
  38. மோகன் பி டி சில்வா – ரூ. 6.01 மில்லியன்
  39. குணபால ரத்னசேகர – ரூ. 1.41278 மில்லியன்
  40. கீதா குமாரசிங்க – ரூ. 972,000
  41. ஜனக திஸ்ஸ குட்டியாராச்சி – ரூ. 1.143 மில்லியன்
  42. விமலவீர திஸாநாயக்க – ரூ. 550,000
  43. கபில நுவன் அத்துகோரள – ரூ. 504,000

இந்தநிலையில், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டாலோ, அனர்த்தத்தால் வீடுகள் பாதிக்கப்பட்டாலோ இழப்பீட்டை பெறுவதற்கு மக்கள் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்.

ஆனால் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசாங்க அதிகாரிகளை மிரட்டியே அரசியல் வாதிகள் பெருமளவு இழப்பீட்டை பெற்றுள்ளனர் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பசீர் சேகுதாவூத் தலைவர் ஹக்கீமுக்கு எதிராகவே! செயற்பட்டார்.

wpengine

இனவாதிகள் எதிர்ப்பார்கள் என்பதற்காக உரிமையை கோராமல் இருக்க முடியாது-சித்தார்த்தன்

wpengine

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலருணவுப் பொதி! முல்லைத்தீவில் வழங்க நடவடிக்கை

wpengine