இலவச உம்றா திட்டம் 2ஆம் குழு நாளை பயணம்! அமைச்சர் ஹலீம், ஹிஸ்புல்லாஹ் வழியனுப்பி வைப்பு

நாடளாவிய ரீதியில 500 இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான இலவச உம்றா திட்டத்தின் இரண்டாவது குழு நாளை புதன் கிழமை சவூதி அரேபியா நோக்கி புறப்படவுள்ளனர்.

100 பேர் கொண்ட இக்குழுவை தபால் மற்றும் முஸ்லிம் விவாக அமைச்சர் ஹலீம் மற்றும் ஹிரா பௌண்டேஷன் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் விமான நிலையத்திலிருந்து வழியனுப்பி வைக்கவுள்ளனர்.

இது வரைக்காலமும் ஹஜ், உம்றா கடமையினை நிறைவேற்றாத 500 இமாம்கள், கதீப்மார்களை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் இலவசமாக உம்றா செய்யும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares