இலங்கை வீரர் வனிந்து ஹசன்ரங்க 10.75 கோடி ரூபாவுக்கு ஏலம்.

இந்திய பெங்களுரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில், இலங்கையின் அனைத்துத் துறை வீரர் வனிந்து ஹசன்ரங்க 10.75 கோடி ரூபாவுக்கு ஏலம் எடுக்கப்பட்டார்

அவர்,இந்தியன் பிரீமியர் லீக்கில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடவுள்ளார். இன்றைய ஏலத்தின்போது பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் தங்கள் அணியில் வனிந்து ஹசரங்காவை தேர்வு செய்ய ஆர்வம் காட்டின.

இறுதியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

ஏற்கனவே வனிந்து ஹசரங்க கடந்த போட்டியில் அடிப்படை விலையாக, 1 கோடி ரூபாவுக்கு ஏலம் எடுக்கப்பட்டு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மாற்று வீரராக விளையாடினார்.

இருப்பினும், 20க்கு 20 போட்டிகளில் வளர்ந்து வரும் அனைத்துத்துறை ஆட்டக்காரராக இருப்பதன் காரணமாக அவர் ஐபிஎல்லில் அதிக ஈர்ப்பைப் பெற்றுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares