Breaking
Sat. Dec 21st, 2024

(SHM Wajith)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ றிஷாட் பதியுதீன் அவர்களால் இலங்கை தேசிய கூட்டுறவு ஆணைக்குழுவின் தலைவராக அல்ஹாஜ் அலிகான் ஷரீப் அவர்கள் உடனடியாக செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரின் செயலாளரும், பிரதிக்கல்விப்பணிப்பாளரும், மீள்குடியேற்றத்திற்கான அமைச்சு மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு மற்றும் ,கைத்தொழில் வர்த்தக அமைச்சு ஆகியவற்றின் இணைப்புச் செயளாலருமாக கடமையாற்றியுள்ளதுடன்,மீள் குடியேற்ற அதிகார சபை இலங்கை காரியக்கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் நிறைவேற்றுப் பணிப்பாளரருமாக சேவையாற்றியுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினராகவும் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் இருக்கும் இவர் சிறந்த கவிஞரும் அரசியல் இலக்கிய மேடைப் பேச்சாளுருமான இவர் முசலிப் பிரதேசத்தில் மணற்குளம் கிராமத்தின் முகம்மது சரீபு சுலைகா உம்மா ஆகியோரின் மூத்த புதல்வராவார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *