தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை

இலங்கையில் பயன்பாட்டிலுள்ள கணனிகளை புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரித்துள்ளது.
விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக இந்த வைரஸ் பரவி வருவதாக தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

விண்டோஸ் 7/ 8.1 மற்றும் 10 ஆகிய இயங்கு தள அமைப்புகளுக்கு இதன் ஊடாக பாதிப்பு ஏற்படக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரம்பா என பெயரிடப்பட்டு இந்த வைரஸ், இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் ஊடாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக கணனியில் சேமித்து வைக்கப்படும் அத்தியவசியமான தரவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபாயம் காணப்படுகின்றது. இதன் காரணமாக பலரின் இரகசிய தரவுகள் களவாடப்படும் ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் இயங்கு தள அமைப்புக்களை புதுப்பித்திருந்தால் இந்த வைரஸ்ஸால் பாதிப்பு ஏற்படாது என இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

சாராய கடைக்கான அனுமதி கேட்ட முஸ்லிம் காங்கிரஸ் (எம். பி)

wpengine

ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவை, பதவி அவசரமாக வழங்க வேண்டும்- அமீர் அலி

wpengine

Auto Diesel இன்று இரவு நாட்டை வந்தடையவுள்ளது-அமைச்சர் கஞ்சன விஜேசேகர

wpengine