இலங்கையில் தற்போது நடப்பது இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி

இலங்கையில் தற்போது நடப்பது இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை மணி என காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

இலங்கையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவது உலக நாடுகளின் கவனத்தை திருப்பியிருக்கிறது. தற்போதைய சூழலில் இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு நியூசிலாந்து ஆலோசனை அளித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் நிலை குறித்து காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடப்பது இந்தியாவுக்கு ஒரு எச்சரிக்கை! முன்னாள் காஷ்மீர் முதல்வர்

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இலங்கையில் என்ன நடந்தது என்பது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2014ஆம் ஆண்டு முதல், இந்தியா ஒரு வகுப்புவாத வெறி மற்றும் கற்பனையான அச்சத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவும் மிகை தேசியவாதம் மற்றும் மத பெரும்பான்மைவாதத்தின் அதே பாதையில் செல்கிறது. இவை அனைத்தும் சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும்’ என தெரிவித்துள்ளார். 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares