இலங்கையில் உள்ள மிக மோசமான பயங்கரவாதி விக்னேஸ்வரன்

தற்போது இலங்கையில் உள்ள மிகவும் மோசமான பயங்கரவாதி வட மாகாண முதலமைச்சரேயாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அத்திட்டிய மிஹிந்து செத் மதுரவில் நடைபெற்ற படைவீரர் நினைவு நிகழ்வில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.

எமது படைவீரர்களின் யுத்த வெற்றியை மலினப்படுத்தக் கூடாது.ஒட்டுமொத்த இலங்கையர்களுக்காகவுமே படைவீரர்கள் உயிர்த் தியாகம் செய்தார்கள்.

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிக மோசமான பயங்கரவாதியைப் போன்று செயற்படுகின்றார் என சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares