பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

‘இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு’

இந்தோ – லங்கா மீன்பிடி பிரச்சினையை தீர்ப்பதற்கு, இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே ஒரே தீர்வு என மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இலங்கை கடலில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குவேன் என்ற கூற்று தவறானது என்றும், இது ஒரு மீன் வள அமைப்பொன்றின் ஒரு யோசனை மட்டுமே என்றும் இறுதி முடிவெதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடலுக்குள் நுழைவதால் குறிப்பாக கீழடி பயணத்தால் கடல் படுகைகள் அழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கடலுக்குள் நுழையும் அனைத்து இந்திய மீனவர்களையும் தொடர்ந்து கைது செய்ய கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

உள்ளூர் மீனவர்கள் மற்றும் மீனவர் அமைப்புகளுடன் கலந்துரையாடிய பின்னரே மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தாஜுதீன் கொலை! ஆனந்த சமரசேகரவை கைதுசெய்ய உத்தரவு

wpengine

ஐக்கியப்படுவோம் , பிள்ளைகளிற்காக எதிர்கால சந்ததிக்காக எழுந்துநிற்போம்,

wpengine

இரத்தினபுரி மாவட்டத்திற்கு வௌ்ள அபாய எச்சரிக்கை

wpengine