பிரதான செய்திகள்

இலங்கைக்கு புதிதாக வரும் நாணய குற்றி,நாணய தாள்

இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் 20 ரூபா நாணய குற்றி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய வங்கியின் வங்கிக் கொள்கையின் 13ஆவது வருடாந்த அறிக்கை வெளியிடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபா பெறுமதியான நாணய தாள்களுக்கு பதிலாக புதிய நாணய தாள்களை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை மத்திய வங்கி புதிய வங்கி சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.

தற்போது அந்த புதிய வங்கி சட்டத்தை சட்டமூலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அதனை அடுத்த வருடத்தில் அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

அதேநேரம் நிதி பரிவர்த்தனை அறிக்கை சட்டம், பணமோசடி தடுப்பு சட்டம் மற்றும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு பணம் வழங்குவதை தடுப்பது குறித்த சட்டம் ஆகியவை தொடர்பாக மேலும் பல திருத்தங்கள் இந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

அத்துடன் இறுதி அநுகூலம் பெறும் பயனாளியுடன் தொடர்புடைய நிறுவனம் சார்ந்த சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மொட்டுக்கட்சிக்கு தமிழ்,முஸ்லிம் மக்களின் வாக்கு கிடைக்கும்.

wpengine

வன்னி மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டதாரிகளுக்குமான விஷேட கலந்துரையாடல்

wpengine

யாழ் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை

wpengine