உலகச் செய்திகள்செய்திகள்பிரதான செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இறுதி செல்ஃபி (Selfie)யுடன் துயர் தரும் பதிவு.

அஹமதாபாத் விமான விபத்தில் லண்டனில் புதிய வாழ்க்கையை தொடங்க இருந்த டாக்டர் தம்பதிகள் மூன்று பிள்ளைகள் என குடும்பத்துடன் உயிரிழந்தனர். இவர்கள் அண்மையில் சுற்றுலாப் பயணத்திற்காக இலங்கைக்கு வந்து சென்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதிக் ஜோஷி கடந்த ஆறு வருடங்களாக லண்டனில் வசித்து வந்தார். ஒரு மென்பொருள் நிபுணரான அவர், தனது மனைவி மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த மூன்று இளம் குழந்தைகளுக்கு வெளிநாட்டில் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கனவு கண்டிருந்தார்.

பல வருட திட்டமிடல், காகித வேலைகள் மற்றும் பொறுமைக்குப் பிறகு, அந்தக்கனவு இறுதியாக நனவாகியது. இரண்டு நாட்களுக்கு முன்பு, அவரது மனைவி, மருத்துவ நிபுணரான டாக்டர் கோமி வியாஸ், இந்தியாவில் தனது வேலையை ராஜினாமா செய்தார்.

நேற்று காலை நம்பிக்கை, உற்சாகம் மற்றும் திட்டங்களால் நிரப்பப்பட்ட அவர்கள் ஐந்து பேரும், லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் 171 இல் ஏறினார்கள். இந்த செல்ஃபியை எடுத்து, உறவினர்களுக்கு அனுப்பினார்கள். புதிய வாழ்க்கையைத் தொடங்க ஒரு வழி பயணம். ஆனால் அவர்கள் அதை ஒருபோதும் அடையவில்லை. விமானம் விபத்துக்குள்ளானது. அவர்களில் யாரும் உயிர் பிழைக்கவில்லை.

இவர்கள் இலங்கையில் தலதா மாளிகைக்கு முன் நின்று எடுத்த படமும், நேற்று விமானம் புறப்பட முன்னர் எடுத்த இறுதி செல்ஃபி (Selfie) படமும் தான் இது.

Related posts

வடமாகாணத்தில் 44 மாதிரிக் கிராமங்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச

wpengine

இன்று இரவு மஹிந்த அணி தென்கொரியாவில்

wpengine

பல ஆயிரக்கணக்கான மக்கள் சூழ, புதிய ஆயர் வரவேற்பு!

wpengine