அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று முதல் சந்தையில், அதிகரித்த விலையில் .!

நாட்டில் உப்பின் விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று முதல் சந்தைக்கு விநியோகம் செய்யப்படுவதாக இலங்கை உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு சந்தையில் விநியோகம் செய்யப்படுவதனால் தற்காலிக அடிப்படையில் தற்போது நிலவும் விலைகளில் அதிகரிப்பு பதிவாகும் என அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உப்பு உற்பத்தி வீழ்ச்சி அடைந்த காரணத்தினால் அரசாங்கம் உப்பை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளது.

இதன்படி, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்யப்பட்டது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று முதல் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வேட்பாளர்களில் பலர் மோசடியில் ஈடுபட்டவர்கள்! மண் ,கொலை

wpengine

Braking மன்னாரில் கொரோனா அனைவருக்கும் (P.C.R) பரிசோதனை-

wpengine

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆபத்தான நிலையில் இல்லை

wpengine