பிரதான செய்திகள்

இறக்காமத்து பிரச்சினை தீர்ந்துவிட்டதாக கூறிய மு.கா எங்கே?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

அண்மையில் அமைச்சர் ஹக்கீம் விசேட உலங்கு வானூர்தி ஏற்பாடு செய்து இறக்காமத்திற்கு விஜயம் செய்திருந்தார்.அங்கு தனது படை பட்டாளங்களுடன் சென்று ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்பட்டிருந்ததாக கூறியிருந்த விடயம் யாவரும் அறிந்ததே!

நேற்று இறக்காமத்திற்கு சென்ற சில இனவாதிகள் பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் மத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.அங்கு எந்த மத அனுஸ்டானங்களும் மேற்கொள்ள முடியாதென்ற நீதி மன்ற தடை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்படியானால்,அமைச்சர் ஹக்கீம் விசேட உலங்கு வானூர்தியில் சென்று ஜனாதிபதியுடனான சந்திப்பில் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விட்டதாக கூறியது என்ன?

 

 

Related posts

நிதி ஒதுக்கீட்டுக்கான உபகரணங்களை வழங்கி வைத்த முன்னால் மாகாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியுதீன்

wpengine

23 ஆம் திகதி காலை 10 மணி வரை பாராளுமன்றம்

wpengine

பகிடிவதையை தனது உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்

wpengine