பிரதான செய்திகள்

இரா.சம்பந்தனுக்கு வீடு வழங்கிய ரணில், மைத்திரி

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மறைந்த ரட்ணசிறி விக்ரமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லமே, சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் தலையீட்டில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்த வீடு, சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனக்கான உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குமாறு பல தடவைகள் அரசாங்கத்திடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவரான் இரா.சம்பந்தன், வீடு சின்னமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

புகையிலைக் கன்றுகளுக்கு இடையே கஞ்சா செடி – ஒருவர் கைது .

Maash

விரைவில் மலே­சி­யா­வுக்­கான உயர்ஸ்­தா­னி­க­ராக முஸம்மில்

wpengine

வவுனியா மாவட்ட செயலக வாணி விழா

wpengine