இராணுவ சோதனைச்சாவடிகள் வட மாகாண மக்கள் பல்வேறு அசௌகரியங்கள்

வட மாகாணத்தில் அதிகரித்துள்ள இராணுவ சோதனைச்சாவடிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதிகரித்த இராணுவ சோதனைச்சாவடிகள் காரணமாக வட மாகாண மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செலவம் அடைக்கலநாதன் பாதுகாப்பு செயலாளரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

இதனால், அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி வட மாகாண மக்களின் இயல்பு நிலை வழமைக்குத் திரும்ப ஆவன செய்யுமாறும் செல்வம் அடைக்கலநாதன் தமது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares