பிரதான செய்திகள்

இராணுவப்புரட்சிக்கு அமெரிக்க மதகுரு காரணம்! ஜனாதிபதி எர்டோகன் சந்தேகம்

துருக்கியின் இராணுவப்புரட்சிக்கு அமெரிக்க மதகுரு காரணமாக இருக்கலாம் என சந்தேகம்வெளியிடப்பட்டுள்ளது.


துருக்கியில் அரசாங்கத்திற்கு எதிராக சதிமுயற்சியல் ஈடுப்பட்ட இராணுவப்புரட்சி தோல்விக்கண்ட நிலையில் ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதில் சுமார் 2 ஆயிரத்து 8க்கும் மேற்பட்ட, அதிகாரிகள் உட்பட்ட படையினர் காயமடைந்துள்னர்.
துருக்கியின் பிரதமர் பினாலி யில்ட்டிரிம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவமானது துருக்கியின் ஜனநாயகத்தில் ஒரு கறுப்புக்கறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆட்சிக்கவிப்பு முயற்சியின் பின்னணி குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த முயற்சி இடம்பெற்றநிலையில் அதற்கு எதிராக போராடுமாறு ஜனாதிபதி எர்டோகன் அழைப்பு விடுத்தார். இந்தநிலையில், அமரிக்காவை வசிப்பிடமாகக்கொண்ட மதகுருவான
பெட்டுல்லா குலென் இந்த சதித்திட்டத்துக்கு பின்னால் இருந்திருக்கலாம் என்று துருக்கியின்
ஜனாதிபதி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Related posts

தேர்தலில் சிறுபான்மை சமூகம் அச்சமற்ற சூழலில்  வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்

wpengine

சிலாவத்துறை மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தின் அவல நிலை! கவனம் செலுத்தாத உயர் அதிகாரிகள்

wpengine

செல்பி எடுத்தால் இடுப்பில் உதை

wpengine