இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே தின நன்னாளில் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
தொழிலாளர்களது உரிமைகள் மேலும் உரிது செய்யப்பட வேண்டும். தொழிலாளர் நலம் சார்ந்த காத்திரமான நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் எதிர்காலத்தில் முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தனியார்  அரச தொழிலாளர்களது சம்பள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் குறுகிய காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.

இலங்கையில் உழைக்கும் மக்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு என பிரிந்திருக்காது அனைவரும் ஒரே தேசிய கொடியின் கீழ் நாட்டிற்காக ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவையாகும்.
நாட்டின் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் உள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு உழைக்கும் மக்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும்.

உழைக்கும் மக்களின் தொழில், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளமை தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியாகும்.  எனத் தெரிவித்துள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares