இரவில் மஹிந்தவை சந்தித்த இராஜாங்க அமைச்சர்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு நேற்றிரவு யாப்பஹூவ பிரதேசத்தில் உள்ள  விடுதி ஒன்றில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்கவே இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க, தமது பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து நட்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்ததாக கூறியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares