பிரதான செய்திகள்

இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே அதிகாரபூர்வ இல்லங்களை ஒப்படைத்துள்ளனர்

இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே அதிகாரபூர்வ இல்லங்களை ஒப்படைத்துள்ளனர் என அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்த இரண்டு அமைச்சர்கள் தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள் இதுவரையில் தங்களது அதிகாரபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை அந்தஸ்துடையவர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் என பதவி வகித்தவர்கள் இவ்வாறு அதிகாரபூர்வ இல்லங்களை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்கள் அதிகாரபூர்வ இல்லங்களை ஒப்படைக்காதிருப்பதனால் புதிய அமைச்சர்களுக்கு அதிகாரபூர்வ இல்லங்களை வழங்குவதில் சிரமங்கள் காணப்படுவதாக அரச நிர்வாக அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் மட்டுமே இதுவரையில் அதிகாரபூர்வ இல்லங்களை ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கிழக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதியின் முகவராக செயல்படுவரா ?

wpengine

இலங்கையர்கள் இருவருக்கு இந்தியாவில் கொரோனா!

Editor

அமைச்சின் ஆலோசனை கூட்டம் அமைச்சர் டெனிஸ்வரன் பங்கேற்பு

wpengine