பிரதான செய்திகள்

இரண்டாம் தவணை கணிதப் பாட பரீட்சை வினாத்தாள் கசிவு!

உயர் பாதுகாப்புடன் தயாரிக்கப்பட்டு வடமேல் மாகாண பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணைப் பரீட்சைக்காக விநியோகிக்கப்பட்ட கணிதப் பாடத்திற்கான பரீட்சை வினாத்தாளின் சில பகுதிகள் தனியார் வகுப்பு நடாத்தும் அரச ஆசிரியர் ஒருவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியா குமார ராஜபக்ஷ தெரிவித்தார்.  ஆனமடு நகரில் நகரில் நடாத்தப்பட்டு வரும் தனியார் பிரத்தியேக வகுப்பிலேயே இந்த மாதிரி கணித வினாத்தாள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வருடம் இரண்டாம் தவணைப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் வடமேல் மாகாண கல்வி அமைச்சினால் வடமேல் மாகாண கல்வி வலயங்கள் ஊடாக அனைத்து பாடசாலைகளுக்கும் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆனமடு பிரதேசத்தில் அரச ஆசிரியர் ஒருவரினால் நடாத்தப்பட்டு வரும் தனியார் பிரத்தியோக வகுப்பில் கைகளினால் எழுதி பிரதிபண்ணப்பட்ட கணித வினாத்தாள்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் 6,7,8,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் தவணைக்கான கணிதப் பாடப் பரீட்சை கடந்த 14 ஆம் திகதி இடம்பெறவிருந்த நிலையில் குறித்த ஆசிரியர் குறித்த கணிதப் பாட வினாத்தாளை கடந்த 9ஆம் திகதி மாணவர்களுக்கு விநியோகம் செய்துள்ளார்.

இவ்வாறு கைகளினால் எழுதப்பட்டு பிரதி பண்ணப்பட்ட வினாத்தாள்களின் சில வினாக்கள் வடமேல் மாகாண கல்வித் தினைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட வினாத்தாள்களில் உள்ள வினாக்களை ஒத்திருந்ததாகவும், சில வினாக்களில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் வடமேல் மாகாண கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீர மரணம் .

Maash

சாஹிரா கல்லூரியின் பரிசளிப்பு! பிரதமர் பங்கேற்பு

wpengine

மன்னார் செயலக கட்டடம் திறந்து வைப்பு! பிரதமருக்கு நினைவு சின்னம் வழங்கிய றிஷாட்

wpengine