பிரதான செய்திகள்

இரகசியமாக சிறையில் இருக்கின்ற அமீத் வீரசிங்கவை ஞானசார எப்படி சந்தித்தார்?

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் சந்தித்துள்ளார்.

கண்டி இனக்கலவரத்தின் பிரதான சூத்திரதாரியான மஹாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமித் வீரசிங்கவுடன் கண்டி கலவரத்தின் முக்கிய சந்தேக நபர்கள் என்று கருதப்படும் இன்னும் சிலரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை அறிந்து கொள்ள முடியாத நிலையில் அவர்களின் உறவினர்கள் எவரும் இதுவரை சந்தேக நபர்களை பார்வையிட செல்ல முடியாத நிலை காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று பொதுபல
சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்கு சென்று அமித் வீரசிங்க உள்ளிட்ட குழுவினரை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வந்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் அமித் வீரசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இடம் மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் ஞானசார தேரர் அதனை அறிந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலக்கு இல்லாதவர்களின் பயணம் வெற்றி அளிக்காது -பிரதி அமைச்சர் அமீர் அலி

wpengine

சுதந்திர கட்சி தற்போது முழுமையாக யானையினால் உணவாக்கப்பட்டுள்ளது.

wpengine

அளுத்கம தர்கா நகரில் புறாக்களை கொன்று Tik Tok வெளியிட்ட மூவர் கைது!

Editor