செய்திகள்பிரதான செய்திகள்

இரகசியமாக குழந்தையை பெற்று குளியலறை வடிகாலில் வீசிய தாய் – புத்தளத்தில் சம்பவம்.

புத்தளம் தள வைத்தியசாலை விடுதி குளியலறை வடிகாலில் இருந்து உயிரிழந்த நிலையில் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இளம் யுவதி, புத்தளத்தில் உள்ள ஒரு மசாஜ் நிலையம் ஒன்றில் பணிபுரிந்த கற்பிட்டி, அனவாசலைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யுவதி, புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தங்கியிருந்த போது, யாருக்கும் தெரியாது இரகசியமாக குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார்.

பெற்றெடுத்த சிசுவை வைத்தியசாலையின் குளியலறை வடிகாலில் கைவிட்டுச் சென்றதாகவும் புத்தளம் தலைமையக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.பெண்ணின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, பெண்கள் விடுதிக்குப் பொறுப்பான தாதி ஒருவர் குளியலறையை பரிசோதனை செய்துள்ளார்.

வடிகானுக்குள் வீசப்பட்ட சிசு
பின்னர், குளியலறையின் வடிகானை பரிசோதனை செய்த போது, குறித்த வடிகானுக்குள் வீசப்பட்ட நிலையில் சிசு சிக்கி கிடப்பதை அவதானித்து வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் , வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட யுவதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

wpengine

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

Editor

தனிப்பட்ட அபிலாஷைகளை மறந்து சமூகத்தின் நலனுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் இது அமைச்சர் றிஷாட்

wpengine