பிரதான செய்திகள்

இயலும் என்றால் என்னை கைதுசெய்து பாருங்கள் பூஜிதவுக்கு ஞானசார தேரர் சவால்

கடந்த இரண்டு வாரகாலமாக ஒளிந்துகொண்டு இருந்த பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தற்போது வெளியில் வந்து பொலிஸ் மா அதிபருக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

என்னை கைது செய்வதற்கு முன்பு மேலே இருந்து வாருங்கள் இந்த நாட்டில் இனவாதம் பேசுகின்ற விக்கினேஸ்வரன்,சிவாஜிலிங்கம்,விஜயகலா மகேஸ்வரி அது போல இந்த நாட்டின் சொத்தான வில்பத்துவை அழித்தும்,முஸ்லிம் வலையத்தை உருவாக்கும் றிஷாட் பதியுதீனை முதலில் கைது செய்துவிட்டு என்னை வந்து கைது செய்யுங்கள் பார்க்கலாம் என்று இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜிதவுக்கு சவால் விடுத்துள்ளார்.

என்னுடன் நேருக்கு நேராக வந்து நின்றுபார்க்கட்டும் நானும் இந்த மாகாணத்தில் உள்ளவன் தான் என்று கூட பேசி உள்ளார்.

அது போல இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேவை கூட கண்ணாடி போட்டவர் என்று நக்கலாக சாடை செய்து உள்ளார்.

Related posts

வில்பத்து பிரச்சினை! றிஷாட்டை பலவீனப்படுத்த டயஸ்போரா, பொதுபல சேனா. மு.கா முயற்சி

wpengine

சுமத்ரா தீவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.

wpengine

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் LPL கிரிக்கட் போட்டி ஆரம்பமானது!

Editor