பிரதான செய்திகள்

இன படுகொலையினை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஷிப்லி அழைப்பு

மியன்மார் நாட்டிலுள்ள ரோஹிங்யா முஸ்லிம்களுக்கெதிராக அந்நாட்டு அரசு மற்றும் இனவாதக் குழுக்களினால் மிக மோசமானதொரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதன்காரணமாக அந்நாட்டிலுள்ள எமது சகோதர முஸ்லிமகளின் உயிர்கள் மிகவும் கொடூரமான முறையில் காவு கொள்ளப்பட்டும், பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டும், உடைமைகள் நிர்முலமாக்கப்பட்டும் வருகின்றன.

மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக தன்நாட்டு மக்களை கொன்று குவிக்கும் இம்மிலேச்சத்தனமான இனப்படுகொலைகளுக்கெதிராக குரல் கொடுப்பதனூடாக இப்பிரச்சினையினை சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பவற்றின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு பல்லின சமூகங்களின் தாயகமாக விளங்கும் எம்நாட்டு அரசை மியன்மார் அரசுக்கெதிராக அழுத்தங்களை பியோகிப்பதற்கும் தூண்ட வேண்டிய ஒரு பொறுப்பு முஸ்லிம்களாகிய எம் அனைவருக்கும் உள்ளது.

எனவே எமது ஷிபா பௌண்டேசன் (SHIFA FOUNDATION) மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 01.09.2017 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் காத்தான்குடி ஜாமியுல்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்து அகிம்சைவழி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுப்பதோடு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கான மகஜர் ஒன்றினையும் கையளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே இக்கவனஈர்ப்புப் போராட்டத்திற்கு அனைத்து பள்ளிவாயல்கள், சமூக நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எம்சகோதர உறவுகளுக்காக குரல் கொடுக்க முன்வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Related posts

எலும்புத்துண்டுக்கும் எச்சில் சோறுக்கும் எழுதும் வக்கற்ற எழுத்தாளர் சாய்ந்தமருது இக்பால்.

wpengine

கைத்தொழில் விருத்தி தொடர்பான கலந்துறையாடல் அமைச்சர் றிசாட் தலைமையில்

wpengine

மே மாதத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்- ஜனாதிபதி

wpengine