பிரதான செய்திகள்

இன்று 4மணிக்கு இறுதி தீர்ப்பு வெளிவரும்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை எதிரான மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பான வெளியிட்ட வர்த்தமானிக்கு ஆட்சேபம் தெரிவித்து உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பல கட்சிகள் இணைந்து மனுக்களை தாக்கல் செய்தன.

மனுக்கள் தொடர்பில் நீண்ட விசாரணையின் பின்னர் இன்று மாலை தீர்ப்பு அறிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க வழக்கின் தீர்ப்புக்காக உள்நாடு மற்றும் சர்வதேச நாடுகளும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்தவை தண்டிப்பது இப்படியல்ல…

wpengine

பாடசாலை அதிபர்களின் கவனத்திற்கு புதிய சுற்றுநிரூபம்

wpengine

விவசாய நிலங்கள் தொடர்பாக அரசாங்கம் அக்கறை காட்டவில்லை

wpengine