இன்று முதல் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின் அனுமதிப்பத்திரம் பறிமுதல்

தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின், சாரதி அனுமதிப்பத்திரத்தினை பறிமுதல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (11) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதற்கு முன்னரும் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தியவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தினை பறிமுதல் செய்து, மீண்டும் தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாநாயக்கு குறிப்பிட்டார்.

எனினும் இன்று முதல் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தினை வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார்.

இதன் காரணமாக புதுவருட காலப்பகுதியில் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்துவதை தவிர்க்குமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares