பிரதான செய்திகள்

இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

பதில் கடமையாற்றும் அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை

wpengine

அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் முஷ்பிகுர் ரஹீம்

wpengine

இனவாத நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ -முஜீபுர் றஹ்மான்.

wpengine