அரசியல்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இன்று பிரதமர் ஹரிணி யாழ் விஜயம் .!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று(15) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு சென்ற பிரதமர், பாடசாலை அதிபருடன் கலந்துரையாடியதுடன், பாடசாலை கல்வி செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன், மாணவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்..

யாழ்ப்பாண இந்துக்கல்லூரியை தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இன்று(15) மாலை, சுழிபுரம், ஏழாலை மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளுக்கு சென்று மக்கள் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாகவும், நாளை(16) கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

Editor

‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ இன்று

wpengine

வடக்கு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine