இன்று கூட்டு எதிர்க்கட்சியினரின் முக்கியமான கூட்டம்

கூட்டு எதிர்க்கட்சியினரின் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்று தலவத்துகொடை பிரதேசத்தில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மே தினத்தை கொண்டாடும் விதமாக, மக்கள் போராட்டம் என்ற தமது பொதுக் கூட்டத்தின் இரண்டாவது கூட்டத்தை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டம் என்ற கூட்டு எதிர்க்கட்சியின் முதலாவது பொதுக் கூட்டம் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

இப்படியான பொதுக் கூட்டங்களை நாடு முழுவதும் நடத்த போவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares