இன்று காலை தலைமன்னார் பிரதான விதியில் வாகன விபத்து! ஓருவர் உயிர் இழப்பு

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் இன்று காலை 6.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரத்தில் இயங்கி வரும் டி.ஜீ.ஜீ.கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான டி.ஜீ.தீபால் சந்தன (வயது-46) என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

அனுராதபுரத்தில் இயங்கி வரும் டி.ஜீ.ஜீ.கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான டி.ஜீ.தீபால் சந்தன மற்றும் சாரதி, உதவியாளர் ஆகிய மூன்று பேரூம் இன்று அதிகாலை அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னாரில் கடல் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கூலர் ரக வாகனத்தில் தலைமன்னார் நோக்கி பயணித்துள்ளனர்.mannar_acci_005

இதன் போது மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்தபோது மீன் ஏற்றும் கூலர் வாகனத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தோட்டவெளி பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள பனை மரத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியது.

இதன் போது டி.ஜீ.ஜீ.கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான டி.ஜீ.தீபால் சந்தன (வயது-46) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.mannar_acci_003

மேலும் உதவியாளராக வந்த அஜித் என்பவர் படுகாயம் அடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதி சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் எவ்வித பாதிப்புக்களும் இன்றி உயிர் தப்பினார்.

சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் விசாரணகளை மேற்கொண்டு வருவதோடு, குறித்த வாகனத்தின் முன் பகுதியில் ஏற்பட்ட திடீர் கோலாறு காரணமாகவே இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.mannar_acci_001

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares