பிரதான செய்திகள்

இன்று இரவு மஹிந்த அணி தென்கொரியாவில்

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான கூட்டு எதிர் கட்சியின் சர்வதேச பரப்புரையின் மற்றுமொரு கட்டத்தை தென்கொரியாவில் முன்னெடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று இரவு தென்கொரியாவை சென்றடையவுள்ளது.

தென்கொரியாவில் வாழும் இலங்கையர்களை சந்தித்து கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளதுடன், அந்நாட்டு ஆளும் மற்றும் எதிர் கட்சியினரையும் சந்தித்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு கலந்துரையாட உள்ளது.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அழுத்தகமகே, லொஹான் ரத்வத்த, பியல் நிஷாந்த மற்றும் செஹான் சோமசிங்க ஆகியோர் கூட்டு எதிர் கட்சியை பிரதிநிதித்துவம் செய்து கலந்துக் கொண்டுள்ளனர்.

Related posts

மஹிந்தவின் வெளிநாட்டு பயணத்தின் இரகசியம் அம்பலம்

wpengine

மே மாதம் சம்பளம் பெறாத 7500 அரச ஊழியர்

wpengine

ஒட்டமாவடி சுகாதார வைத்திய அலுவலக பரிசோதனை! உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

wpengine