பிரதான செய்திகள்

இன்று இரவு அமைச்சராகும் 15பேர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று இரவு பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று இரவு அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய முன்னணி குறித்த தகவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சுக்களுக்கு அமைச்சர்களை தெரிவு செய்வதில் நிலவிய இழுபறியின் காரணமாக கடந்த ஓரிரு தினங்களாக பிற்போடப்பட்ட அமைச்சரவை பதவியேற்பு, நாளைய தினம் இடம்பெறும் என இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 15 உறுப்பினர்கள் இன்று இரவே அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளனர் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

ஜனாதிபதி தற்போது பொம்மை, அதனை ஆட்டுவிற்கும் பொம்மலாட்டகாரன் பசில்

wpengine

இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாதா? – போராட்டம் பற்றி தற்போதைய அரசாங்கத்திற்கு சொல்லத் தேவையில்லை.

Maash

எழுக தமிழ் பேரணியூடாக தற்போது இனவாதம் துண்டிவிடப்படுகின்றது-உதய கம்மன்பில

wpengine