பிரதான செய்திகள்

இனவாதிகளின் செய்திகளை! சிங்கள ஊடகங்கள் தவிர்ந்த நிலையில் முஸ்லிம் ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றது.

இனவாதிகளின் செய்திகளை பிரசுரம் செய்வதில் முஸ்லிம் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் கேட்டுள்ளது.

போரத்தின் தலைவர் என்.எம். அமீன்  இதனைத் தெரிவித்தார்.

இனவாதிகள் சிறுபான்மையினரின் மத உணர்வுகளை தூண்டும் விதமாக இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த கருத்துக்களை பெரும்பான்மை ஊடகங்கள் தவிர்ந்து கொண்டுள்ள நிலையில், அதனை பிரச்சாரம் செய்பவர்களாக முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அமைந்துவிடக் கூடாது.

இந்த நாட்டில் வாழும் பெரும்பான்மையான பௌத்த மக்கள் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றி நல்லபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர். இனவாதம் பேசுபவர்களுக்கு இந்த நாட்டு மக்களிடத்தில் அங்கீகாரம் இல்லை என்பதற்கு எமது நாட்டின் கடந்த கால வரலாறு சிறந்த பாடமாகும்.

அரசாங்கமும் இன, மத நல்லிணக்கத்துக்கான பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றது. இது நாட்டின் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வழிசெய்யும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலும் ஏற்பட்டுள்ளது.

இதனை சீர்குலைப்பதற்கு இனவாத அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை நாம் உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் நாட்டு முஸ்லிம்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தது எனவும் போரத்தின் தலைவர்  மேலும் கூறினார்.

Related posts

அரசாங்க உத்தியோகத்தர்களின் சேவை குறித்து முறைப்பாடு

wpengine

மன்னாரில் 13 ஆயிரம் முருங்கை மரக் கன்றுகளை வழங்கும் வேலைத்திட்டம்- அரசாங்க அதிபர் ஏ. ஸ்ரன்லி டி மெல்

wpengine

இவ்வாட்சிக்கு சோரம் போன மு.கா பிரதிநிதிகள்

wpengine