பிரதான செய்திகள்

இனப்பிரச்சனை தீர்வு! மஹிந்த ராஜபக்ஷ குழப்பும் நடவடிக்கையில் – இரா. சம்பந்தன்

(எஸ்.றொசேரியன் லெம்பேட்)

புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தற்போதைய அரசு செயற்பட்டு வரும் நிலையில் அதனை குழப்ப முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாத யாத்திரையினை மேற்கொண்டு வருவதாகவும் தமிழ் மக்கள் நிதானமாகச் செயற்பட வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற ‘தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்’ என்னும் தலைப்பிலான கருத்துப்பகிர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவது, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

எனினும், இராணுவம், அரச அதிகாரிகள் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்துக்குள் அங்கம் வகிக்கும் சில அரசியல்வாதிகள் ஆகியோர் மஹிந்த ராஜபக்ஷவுக்கே விசுவாசமாக இருக்கின்றனர்.

ஜெனீவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலும், அரசியல் கைதிகள் விடுதலை உட்பட சில பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் தாமதம் இருக்கின்றது. தமிழ் மக்கள் நிதானமாகவும் பொறுப்போடும் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

அந்தமான் தீவுப்பகுதியில் புயல்! இலங்கையினை தாக்குமா

wpengine

மன்னார், தொங்குபாலம் கவனிப்பாரற்ற நிலையில் கவனம் செலுத்தாத அதிகாரிகள்

wpengine

30 அமைச்சர்களுக்கு புதிய வாகனம்! ஹக்கீமுக்கு ரூபா 3 கோடி 50 இலட்சம்.

wpengine