உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்தோனேசியாவில் தேவாலயத்தை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதல்!

இந்தோனேசியாவின் மகாசர் நகரில் கிறிஸ்தவ தேவாலயத்தை இலக்குவைத்து இரு தற்கொலை குண்டுதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

சுலவேசி தீவில் உள்ள தேவாலயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இந்த தற்கொலை குண்டுதாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் நபர் மோட்டார் சைக்கிளில் தேவாலயத்திற்குள் நுழையமுயன்றவேளை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை தடுத்து நிறுத்தினர் என கிறிஸ்தவ மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பதை பாதுகாப்பு கமராக்கள் காண்பித்துள்ளன. குருத்தோலை ஞாயிறு தின ஆராதனைகளில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்தவர்களை இன்னொரு தற்கொலை குண்டுதாரி இலக்குவைத்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மஹிந்தவின் நிழல் அமைச்சு கூடுகிறது

wpengine

நாட்டு மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும் 77 வருட சாபமா அல்லது 77 நாட்களின் சாபமா?

Maash

திவிநெகும நிதி மோசடி நிதி அமைச்சர் பெசில் விடுதலை

wpengine