பிரதான செய்திகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக மாநில துணைத் தலைவரை சந்தித்த ஹக்கீம்

இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு, இராமநாதபுரம் தொகுதி, இந்திய பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக மாநில துணைத் தலைவருமான கே.நவாஸ்கனி அவர்களுக்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை (12) தமது இல்லத்தில் இராப் போசன விருந்தளித்து கௌரவித்தார்.

அதில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் முன்னாள் தலைவர் என்.எம் அமீன், தமிழக “மணிச்சுடர்” ஊடகவியலாளர் சாஹுல் ஹமீத், ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அயல் நாடுகளான இந்தியா, இலங்கை ஆகியவற்றின் சமகால அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தியதாக பயனுள்ள கருத்துப் பரிமாற்றமும் இடம்பெற்றது.

Related posts

நான் ஒரு வாரத்தில் எரிபொருள் விலை மக்களின் வரிச்சுமையை குறைப்பேன்

wpengine

தமிழ் ,முஸ்லிம் மத்தியில் விரிசல்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே சில தமிழ் அரசியல் தலைவர்கள்

wpengine

கிராம மட்டத்தில் புத்தாண்டு தடை

wpengine