உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்தியாவில் மோடி,அமெரிக்காவில் ஒபாமா முஸ்லிம்களை துன்புறுத்துகின்றார்கள்.

சர்ச்சை பேச்சுக்களால் புகழ்பெற்ற உத்திரபிரதேச அமைச்சர் ஆசாம்கான், தற்போது பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள விவகாரம் மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.


அமெரிக்காவில் நடிகர் ஷாருக்கானிடம் விசாரணை நடத்தப்பட்ட விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்களிடையே கருத்து தெரிவித்த ஆசாம் கான், இந்தியாவில் மோடியும், பிரதமர் மோடியின் நண்பரான ஒபாமா அமெரிக்காவிலும் இஸ்லாமியர்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள்.

இஸ்லாமியர்கள் பல வகைகளில் துன்புறுத்தப்படுகிறார்கள். இது எங்கு முடியும் என தெரியவில்லை.

உ.பி.யில் சட்ட ஒழுங்கு சீராக தான் உள்ளது. குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Related posts

GCE O/L, A/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு 6 மாத கால பயிற்சிநெறி!

Editor

சமத்துவம்,சகோதரத்துவம் பொருந்திய நாளக அமையவேண்டும்! ரகுமத் மன்சூரின் வாழ்த்துச் செய்தி

wpengine

திட்டமிடப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான கண்டி கலவரம். ஓர் பார்வை.

wpengine