பிரதான செய்திகள்

இந்தியாவின் கடும்போக்கு பாரதீய ஜனதா கட்சி இலங்கைக்கு மக்கள் அச்சம்

இலங்கையில் இந்தியாவின் கடும்போக்கு பாரதீய ஜனதா கட்சி உருவாவது பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லையென்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன.

இலங்கை மற்றும் நேபாளில் தாம் விரும்பும் வகையிலான ஆட்சியமைக்கும் திட்டம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் அமித் ஷா அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இதனையடுத்து குறித்த பெயரில் இலங்கையில் ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், மக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லையெனவும் இலங்கையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் அதிகாரமுள்ள தேர்தல் ஆணைக்குழு இது குறித்து முடிவெடுக்கும் எனவும் ரமேஷ் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரிவினைவாதத்தை தூண்டாமல் ஒற்றையாட்சி அடிப்படையில் தீர்வைப் பெற விக்னேஸ்வரன் முயற்சிக்க வேண்டும்!

wpengine

பாராளுமன்றத்தில், ஆளுமைமிக்க தலைவரான காலஞ்சென்ற இரா.சம்பந்தன் அவர்களை நினைவுகூரிய அரசியல் கட்சி தலைவர்கள்.

Maash

திருகோணமலையில் 06 வயது சிறுமி டெங்கு காய்ச்சலினால் உயிரிழப்பு

wpengine