பிரதான செய்திகள்

இணைக்குழு தலைவர் அலிஸாஹிர் மௌலானா

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்த நியமனக் கடிதம் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதி அமைச்சர் அமீர் அலி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோர் செயற்பட்டு வரும் நிலையில் புதிதாக அவர் இணைத்தலைமை பதவிக்கு உள்வாங்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

Related posts

மார்பகத்தை இழந்த பெண்! முன்னரை விட நான் இப்போது சந்தோஷம்

wpengine

பாகிஸ்தான் பயிற்றுநர்களாக முஷ்தாக் அஹ்மத், அஸ்ஹர் மஹ்மூத்

wpengine

சிங்கள பல்கலைக்கழக மாணவர் அமைச்சர் றிஷாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

wpengine