பிரதான செய்திகள்

இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் ஆறு தீவிரவாதிகள் விபரம் இதோ

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் ஆறு தீவிரவாதிகள் மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கொழும்பு, கட்டுவாப்பிட்டிய மற்றும் மட்டக்களப்பு பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அரச புலனாய்வு பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹரானினால் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டதாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவினால், இலங்கை புலனாய்வு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் அரச புலனாய்வு பிரிவினால் முழுமையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு தொடர்பான சந்தேக நபர்கள் 6 பேர் தொடர்பிலும் அவர்களினால் மேற்கொள்ள ஆயத்தமாக இருந்த தாக்குதல் தொடர்பிலும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த புலனாய்வு பிரிவு அறிக்கைக்கமைய சஹாரன் ஹாஷீம், ஜால் அல் குய்தால், ரில்வன், சஜிட் மவ்லவி, ஷாஹிட் மற்றும் மில்ஹான் மற்றும் அவர்ககளின் ஆதரவாளர்கள் சிலர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த தீவிரவாதிகளால் இந்திய தூதரகம் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்வதற்கும், துப்பாக்கி சூடு நடத்துவதற்கும் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கவும், வாகனங்களை கொண்டு மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக புலனாய்வு பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பிற்கமைய இலங்கை புலனாய்வு பிரிவினால் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவரால் கடந்த 11ஆம் திகதி பொறுப்பு கூறும் பிரிவினரிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயற்பாட்டாளர்களினால் நாடு முழுவதும் பல பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடு தொடர்பில் புலனாய்வு பிரிவினால் முழுமையான அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுின்றது.

நேற்று கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டல் வளாகத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் தற்கொலை குண்டு தாக்குதல் எனவும், அதனை சஹாரன் ஹாஷிம் என்பவரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உட்பட செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை நாட்டில் செயற்படும் அடிப்படைவாத அமைப்புக்களை முற்றாக இல்லாமல் செய்யப் போவதாக நேற்றைய தினம் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக…!

wpengine

மன்னார் மறை மாவட்ட ஆயரை சந்தித்த ஜம்மியத்துல் உலமா சபை

wpengine

றிஷாட் காட்டை அழித்து வீடுகளை கட்டினார்! 29ஆம் நீதி மன்ற அழைப்பாணை

wpengine