இடம்பெயர்ந்த மக்களை வாக்களிப்பு அழைத்தமை விசாரணை

ஜனாதிபதித் தேர்தலின் (2019) போது, புத்தளத்திலிருந்து 225 பஸ்களில் 12 ஆயிரம் வாக்காளர்களை வட மாகாணத்துக்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளின் ஓர் அங்கமாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர நாளை மறு தினம் 22 ஆம் திகதி சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.


தேர்தல் சட்ட மீறல் மற்றும் பொதுச் சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில், ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற இந்த விவகாரத்தை மையப்படுத்திய முறைப்பாட்டுக்கு அமைய சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இது குறித்து கடந்த 16 ஆம் திகதி , சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டிருந்தபோது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில், குறித்த இடம்பெயர்ந்த 12,000 வாக்காளர்களையும், வட மாகாணத்தில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்களிக்க அனுப்பி வைக்க 225 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டதையும், நீண்ட நாள் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றும் அமைச்சின் தலையீட்டுடன் அந்த விடயம் இடம்பெற்றுள்ளமையும் குறித்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


இதன்போது, அவ்வாறு வாக்காளர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுக்க நிதி அமைச்சிடமிருந்து எழுத்து மூல அனுமதி பெறப்பட்டதாகவும், தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கும் அறிவிக்கப்பட்டதாகவும் ரிஷாத் சார்பில் சி.ஐ.டி. விசாரணைகளின் போது கூறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


இந்நிலையிலேயே, அப்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீர விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares