பிரதான செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டார் குசல்

இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் இலங்கை அணியின் வேப்பந்துவீச்சாளர் தம்மிக்க பிரசாத் காயமடைந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக விளையாடுவதற்காக குசல் ஜனித் பெரேரா இங்கிலாந்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவிக்கையில்,

இலங்கை அணியில் தாராளமாக  பந்துவீச்சாளர்கள் உள்ளனர். நான்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களும் 2 சகலதுறை ஆட்டக்காரர்களும் உள்ளனர்.

இந்நிலையில், சுரங்க லக்மால் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் டில்ருவான் பெரேரா ஆகியோர் மேலதிக வீரர்களாக உள்ளனர்.

இதையடுத்தே, பந்துவீச்சாளர் தம்மிக்கவுக்கு பதிலாக துடுப்பாட்ட வீரர் குசலை இங்கிலாந்துக்கு அனுப்ப தீர்மானித்துள்ளோம்.

வெகுவிரைவில் குசல் ஜனித் பெரேரா அணியுடன் இணைந்துகொள்வார். அவர் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவாரென அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கோத்தபாயவின் அரசியல் பயணம் இன்று

wpengine

வவுனியாவுக்கு வருகை தந்த சிங்க லே அமைப்பு

wpengine

ஹவாய் தீவுப்பகுதியில் இடம்பெற்ற காட்டுத்தீ – பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு!

Editor