பிரதான செய்திகள்

ஆறு கைதிகளை சொந்த செலவில் விடுதலை செய்த ஹிஸ்புல்லாஹ்

மொனராகலை சிறைச்சாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிவாசலை திறந்து வைப்பதற்காக அங்கு விஜயம் செய்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், குறைந்த தண்டப் பணத்தை செலுத்த முடியாமல் கடந்த எட்டு வருடங்களாக சிறைவாசம் அனுபவித்துவரும் 6 சிறைக்கைதிகளை தனது சொந்த செலவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தள்ளார்.

அத்துடன், பிணை கையெழுத்திட எவருமில்லாது சிறையில் வாடுகின்ற மேலும் 23 கைதிகளை விடுதலை செய்யவும் தான் நடவடிக்கை எடுப்பதாக இதன் போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

மொனராகலை சிறைச்சாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிவாசல் திறப்பு விழா இன்று புதன்கிழமை காலை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பள்ளிவாசலை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்த இராஜாங்க அமைச்சர், அங்கு இரண்டு ரக்ஆத் சுன்னத் தொழுகையையும் நிறைவேற்றினார். பின்னர், அங்குள்ள சிறைக்கைதிகளுடன் சுமுகமாக கலந்துரையாடினார்.

இதன் போது, குறைந்த தண்டப் பணத்தை செலுத்த முடியாமல் கடந்த 8 வருடங்களாக சிறைவாசம் இருந்து வரும் 6 கைதிகளுடனும் பேசிய இராஜாங்க அமைச்சர், உடனே அவர்களை விடுதலை செய்வதற்குத் தேவையான 70ஆயிரம் ரூபா பணத்தை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கியுள்ளார்.

அத்துடன், பிணை கையெழுத்திட எவருமில்லாது சிறையில் வாடுகின்ற மேலும் 23 கைதிகளை விடுதலை செய்வதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும் இதன் போது வாக்குறுதி வழங்கியுள்ளார்.

Related posts

விரக்தியிலும், மனக்கவலையிலும் இருக்கும் மாணவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்கள் கைகொடுக்கின்றன.

wpengine

சிவசக்தி ஆனந்தனின் செயலாளரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணை.

wpengine

உள்ளூராட்சித் தேர்தலில் மு.கா. தனித்துபோட்டி

wpengine