பிரதான செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உட்பட 27 பேர் கைது.

சுகாதார அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உட்பட 27 பேர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீட மாணவர் சங்கம் நேற்று வியாழக்கிழமை (27) சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் உட்பட  ஒரு குழுவினர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் 8 பேர் சுகாதார அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளைத் தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவை மீறி அவர்கள் தொடர்ந்து அதே இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இதன்போது, பொலிஸார் 27 பேரை கைது செய்துள்ளனர்.

Related posts

புத்தளம் பகுதியில் மீட்கப்பட்ட அரிய வகை ஆந்தை!

Editor

இன்று முதல் பயணிகள் பஸ்களில் இடம்பெறும் மாற்றம்!

Editor

கட்சி கூட்டத்தில் “பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தலைவர்“

wpengine