உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஆப்பிரிக்கா பயங்கரவாத தாக்குதலில் 25க்கு மேற்பட்டோர் பலி!

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா, இந்நாட்டின் அருகே கொங்கோ நாடு அமைந்துள்ளது. 

இந்த இரு நாடுகளில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ஜனநாயக கூட்டணி படை என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. 

இந்த பயங்கரவாத அமைப்பு பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொங்கோ எல்லையோரம் உள்ள உகாண்டாவின் பொண்ட்வி நகரில் உள்ள கிராமத்தில் ஒரு பாடசாலை உள்ளது. இந்த பாடசாலை மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

10ஆம் திகதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை

wpengine

கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, புகையிரத நிலையத்துக்கு விஜயம்.

Maash

காபந்து அரசில் அங்கம் வகிப்பதில்லை எனவும் அவசரகால சட்டத்தை எதிர்ப்பதெனவும் மக்கள் காங்கிரஸ் ஏகோபித்து முடிவு! றிஷாட்

wpengine