ஆசிரியர் சேவைகள் சங்கம் – ஆசிரியர் சங்கத்துக்கு இடையில் முருகல் நிலை

இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக 50 மில்லியன் ரூபா நஸ்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்ய இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு சொந்தமான பத்திரிகையில் தமது சங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல் வௌியிடப்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

10 நாட்களுக்குள் அந்த பொய்யான தகவலை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மஹிந்த ஜயசிங்க தெரியப்படுத்தியுள்ளார்.

அவ்வாறு இல்லையாயின் 50 மில்லியன் ரூபா நஸ்டஈடு கோரி, இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் அந்த சங்கத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares