உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல்!

ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியது.

மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

அத்துடன், பொருளாதார நெருக்கடியானது வல்லரசு நாடுகளையே திணறடித்தது. தற்போதுதான் பல நாடுகளும் அந்தத் தாக்கத்திலிருந்து மீண்டு வருகின்றன.

இந்நிலையில், ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மக்கள் தொகை அதிகம் இருக்கும் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது.

குறிப்பாக ஹாங்காங்கில் கொரோனா செயல்பாடு இப்போது மிக அதிகமாக உள்ளதாக நகரின் சுகாதார மைய தொற்று நோய் பிரிவின் தலைவர் ஆல்பர்ட் ஆவ் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல சிங்கப்பூரிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டு மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மே மாதம் முதல் வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு சுமார் 28மூ அதிகரித்து 14,200 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதம் அதிகரித்துள்ளது.

Related posts

61 பயணிகளுடன் சென்ற FlyDubai விமானம் ரஷ்யாவில் விபத்திற்குள்ளானது

wpengine

ரஷ்யாவுக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா

wpengine

அமெரிக்காவில் இருந்து முதல் மாதத்தில் 37,660 பேரை நாடு கடத்திய டொனால்ட் ட்ரம்ப்

Maash